புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இதய நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்ட இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 வயது சிறுவன் உயரமான மலைஉச்சியில் ஏறி சாதனை படைக்க உள்ளான். இங்கிலாந்தின் லீசஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சேஷ் சர்மா. இந்திய வம்சாவளியை
சேர்ந்தவர். மனைவி, லியான். இவர்களது மகன் ஜெய்சர்மா (7). இவன்
ஸ்காட்லாந்தில் இதய நோயாளிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக நிதி திரட்டி வருகிறான். இதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பெரிய பென்நேவிஸ் மலை உச்சியில் ஏறி சாதனை படைக்க உள்ளான். இதுகுறித்து சிறுவனின் தந்தை சஞ்சேஷ் கூறியதாவது: கர்ப்பத்தில் இருக்கும்போதே ஜெய்க்கு இதய பாதிப்பு இருந்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதை மறுத்துவிட்டு உரிய மருத்துவ பரிசோதனை, சிகிச்சை எடுத்துக்கொண்டோம். தற்போது ஆரோக்கியமாக உள்ள ஜெய், சிஸ்டன் பகுதியில் உள்ள மெர்டன் ஆரம்ப பள்ளியில் படிக்கிறான். அவன் மிகவும் துடிப்பானவன். சாதனைகள் செய்வதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதும் அவனுக்கு விருப்பமான விஷயங்கள். இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு நிதி திரட்ட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, மலையேறும் சாதனையை ஜெய் சர்மா நிகழ்த்த உள்ளான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top