பிரித்தானியாவின் குடி மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
வறட்சியான பகுதிகளுக்கு மிக விரைவில் மழை கிடைக்கவிட்டால் பியரின் விலை உயரும் சூழ்நிலை தோன்றியுள்ளது.நேற்றைய தினம் பொருளாதார நிபுணர்கள் இந்த எச்சரிக்கைச்
செய்தியை வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவின் பியர் மற்றும் பப்ஸ் சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,
தரமான பார்லி கிடைப்பதில் தடங்கல் ஏற்படுள்ளது. இதனால் குடிபானத்தின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.உருளைக்கிளங்கு விளைச்சலும் இம்முறை குறைந்துள்ளதால் சிப்ஸ்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.South East, East Anglia ஆகிய பிரதேசங்களில் வரட்சி ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மழை பெய்தால் நிலைமை சீராகி விடும்.
0 கருத்து:
கருத்துரையிடுக