புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டுபாயில் பெற்றோருடன் வாழ்கின்ற ஆறு வயது உடைய பிரித்தானிய சிறுமி ஒருத்திக்கு இலங்கைச் சாரதி ஒருவர் முத்தம் கொடுத்தமையுடன் தொடை உட்பட உடலின் பாகங்களை கடித்தும் இருக்கின்றார்.இலங்கைச் சாரதிக்கு வயது 21. சிறுமியும் இவரும் பூச்சாண்டி விளையாடி
இருக்கின்றனர். விளையாட்டின்போது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லைகள் கொடுத்து இருக்கின்றார்.

சிறுமிக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார். சிறுமியின் கன்னம், கழுத்து, தொடை போன்ற உறுப்புக்களில் கடித்து இருக்கின்றார்.சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் இவ்விபரீதம் கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்று இருக்கின்றது.இவருடன் விளையாடக் கேட்டு இருக்கின்றார் சிறுமி.இவர்தான் பூச்சாண்டி விளையாட்டை தேர்ந்து இருக்கின்றார்.

சிறுமியின் தாய்க்கு வயது 27. மகளின் உடலில் புள்ளிகளை கண்டமையை அடுத்து பொலிஸில் முறையிட்டு இருக்கின்றார்.இக்குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றில் நேற்று முதல் தடவையாக செவிமடுக்கப்பட்டது.சிறுமிக்கு முத்தம் கொடுத்தமையை மன்றில் ஒப்புக் கொண்டார் இலங்கைச் சாரதி. ஆனால் விளையாடிக் கொண்டிருந்தபோது முத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top