லண்டனிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை தனது மனைவியின் தங்கையைக் கர்ப்பவதியாக்கி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,கடந்த நவம்பர் மாதம் லண்டனில் இருந்து வந்து வலிகாமம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்துள்ளார் யாழ்.இணுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞன்.
அத்துடன் பதிவுத் திருமணம் செய்துவிட்டு 3 வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மேற்படி இளைஞன் அடிக்கடி தான் பதிவுத் திருமணம் செய்த பெண் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
தற்போது அந்த இளைஞன் லண்டன் சென்றுள்ள நிலையில், குறிப்பிட்ட மணப் பெண்ணின் தங்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அப் பெண் 4 மாதக் கர்ப்பிணி எனத் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணின் பெற்றோர் தங்கையை தீவிர விசாரணைக்குட்படுத்திய போது லண்டன் மாப்பிள்ளையின் திருவிளையாடல் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் மாப்பிள்ளையிடம் விசாரணை செய்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டது மட்டுமன்றி, இருவரையும் தான் திருமணம் செய்வதாகத் தெரிவித்துள்ளார் மன்மதராசா.
இதேவேளை குறிப்பிட்ட லண்டன் மாப்பிள்ளை மீண்டும் லண்டன் செல்லும் முன் வீட்டாரில் சிலரையும் தனது சகோதரியையும் இலங்கையின் பல இடங்களைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இந் நிலையில் நுவரெலியாவில் வைத்து அனைவரும் சாப்பிடச் சென்றபோது தன்னைப் பலாத்காரம் செய்ததாக மணமகளின் தங்கை தெரிவித்தள்ளார்.
இதேநேரம் இச் சம்பவத்தை அடுத்து மணமகள் லண்டன் மாப்பிள்ளையை விவாகரத்து எடுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக