புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கைகள் மற்றும் கால்களே இல்லாமல் பிறந்து உலகின் மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளனாக வலம் வரும் Nick Vujicic பற்றி உங்களில் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.ஆம், உண்மையில் ஒரு ஹீரோ, ரோல் மொடல் இவர் தான். இவர் திருமணத்தின் பின்னர் ஹவாய் தீவில் உள்ள கடற்கரையில் மனைவியோடு சந்தோசமாக
பொழுதைப் போக்கும் காட்சிகளே இவை.



Tetra-amelia என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பிறந்த Nick Vujicic தற்போது தனது காதல் மனைவியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருக்ன்றார்.சிறுவனாக இருக்கும் போது மாபெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட Nick Vujicic இன்று உலகெங்கும் அதிகம் விற்கப்படும் புத்தக எழுத்தாளர்.கைகள் கால்கள் இருக்கும் மனிதர்கள் செய்யும் எல்லாக் காரியங்களையும் இவரும் செய்கின்றார்.எழுதுதல், ரைப் பண்ணுதல், ரம்ஸ் வாசித்தல், பல் துலக்கல் என்று எல்லா அன்றாட செயற்பாடுகளையும் தானே செய்கின்றார்.
29 வயதான Nick Vujicic இதுவரை 25 நாடுகளுக்குச் சென்று 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகப் பேசியுள்ளார்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top