புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தன்னுடைய 8 வயது மகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அவளின் பிறப்பு உறுப்பை சிதைத்த காமுகத் தந்தையை இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.கடந்த 2011.03.26 ஆம் திகதி தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தினார் என சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது மகளை பாலியல் பலாத்தாரம் செய்தார் என குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சந்தேக நபர் தனது சட்டத்தரணி மூலம் பிணை விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார். இவரின் பிணை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி 5000 தண்டப் பணமும் 50,000 ஆயிரம் இருவர் கொண்ட சரிதப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

தற்போதும் காமுகத் தந்தை யாழ்.சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறையில் இருக்கும் போது நெடுந்தீவுப் பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை அந்தப் பெண்ணே பிணை எடுப்பதற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி இவரை விட்டு வேறு ஒரு நபருடன் குடும்பமாக வாழ்வதாகவும் காமுகத் தந்தை குற்றம் ஒன்றிற்காக 5 வருடங்களாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுப் பின் சென்ற வருடமே விடுதலையாகியிருந்தார்.

வீட்டில் தனது மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதைக் கண்ட கணவன் தனது சொந்த எட்டு வயது மகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி அச்சிறுமியின் பிறப்பு உறுப்பை சிதைத்துள்ளார்.

தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரின் வழக்கு விசாரணை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top