ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தண்டுவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா - லட்சுமி தம்பதிக்கு ஒரே மகன் ஜனார்த்தனன். இவர் கடந்த 1997-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்லூரியில் என்ஜினீயரிங் முடித்தார்.
பின்னர் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில்
ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு தேர்வானார். ஆஸ்திரேலியா செல்வதற்காக 'விசா' பெற பெங்களூர் சென்றார். அப்போது நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார். மகனை காப்பாற்ற அவரது பெற்றோர் பல்வேறு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. ஜனார்த்தனன் சிகிச்சைக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நன்கொடை வழங்கி உதவியது.
ஏராளமான பணம் செலவழித்ததில் ஜனார்த்தனன் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் கவலை அடைந்த பெற்றோர் மதனப்பள்ளி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், 'தனது மகனை காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும். இல்லையேல் எனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரி யிருந்தனர்.
இது பற்றி ராமச்சந்திரா, ‘’எங்களுக்கு வயதாகிவிட்டது. எனது மகனை கவனிக்க எங்களுக்கு சக்தி இல்லை. அவனை என்ஜினீயராக பார்த்த எங்களுக்கு இப்போது அவன் படும் நரக வேதனையை பார்க்க முடியவில்லை. எங்களுக்கு அரசு உதவ வேண்டும். அல்லது அவனை கருணை கொலை செய்ய கோர்ட்டு அனுமதிக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுமலதா விசாரணையை மார்ச் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக