இன்று கூகிளின் பக்கத்தில் ஹென்றி ரூடல்ப் ஹெர்ட்ச் (Heinrich Rudolf Hertz ) எனும் அறிவியல் அறிஞர் சிறப்பிக்கப்பட்டுள்ளார். 1857ம் ஆண்டு பெப்ரவரி 22ந் தேதி ஜெர்மன் நாட்டில் பிறந்த இவர் ஒரு சிறந்த அறிவியல் அறிஞர்.பல் மொழித் தேர்ச்சி மிக்க இவர், இயற்பியல் பேராசிரியராகப்
பணியாற்றிய போது, மேற்கொண்ட ஆய்வுகளில், ரேடியோ அலைகளின் செயற்பாட்டை முதலில் ஆய்வு ரீதியாக நிருபித்தார்.
ரேடியோ அலைகள் தொடர்பான அவரது மின்காந்தவியல் கண்டுபிடிப்பினைக் கௌரவிக்கும் வகையில் ரேடியோ அலைகளின் அதிர்வெண் அலகு அவரது பெயரிலேயே ஹெர்ட்ச்(Hz) எனஅழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
1894 ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி மறைந்த அவர், வாழ்ந்த காலம் 36 ஆண்டுகளே. ஆயினும் அவரது கண்டுபிடிப்பின் மூலம் இன்றளவும் உலகம் பல்வேறு வழிகளிலும் முன்னேறிச் செல்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக