நமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடிக்கொள்வதற்கு பல தேடியந்திரங்கள் காணப்படுகின்றன.அவற்றுள் பிரபல்யமானதும், அதிவேகமானதுமான கூகுள் தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது.தேடுதல் மட்டுமன்றி
வேறு பல சேவைகளையும் வழங்கும் கூகுள் நிறுவனம் அதிகளவில் பயனர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் முன்னணி வகிக்கின்றது.
அதற்கிணங்க தற்போது தேடியந்திரத்தின் பக்கப்பின்னணியை பயனர்கள் தாம் விரும்பிய வண்ணத்தில் மாற்றுவதற்கான வசதியையும் வழங்கியுள்ளது. கீழ்தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பின்னணியை மாற்றியமைக்க முடியும்.
1. முதலாவது படத்தில் காட்டியவாறு Change background image என்பதை கிளிக் செய்யவும்.
2. ஜிமெயிலுக்கான உங்களது பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுளையவும்.
3. நீங்கள் விரும்பிய பின்னணி படத்தை தெரிவு செய்து, Select என்பதை கிளிக் செய்யவும்.
0 கருத்து:
கருத்துரையிடுக