புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மெக்சிகோ நாட்டின் தலைநகருக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டெல்லோபான் (Teloloapan) நகரில் வீதியில் 10 பேரின் துண்டிக்கப்பட்ட தலைகள் கிடந்தன. இறைச்சி வெட்டும் கூடத்திற்கு அருகில் இவை கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் மீட்டு சென்றனர்.

இவை 7 ஆண், 3 பெண்களின் தலை ஆகும். இவர்களுக்கு சுமார் 20 முதல் 35 வயது இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் தலைகள் கிடந்த இடத்திற்கு அக்கம்பக்கத்தில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

போதைப்பொருள் கும்பலின் வன்முறையில், இவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top