புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நோர்வேயில் ஆர்ட்டிக் கடற்கரையில் உள்ள டிராம்சோ என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர். 12 பேரைக் கொண்ட பனிமலை ஏறும் குழுவினர் சோர்ப்மெகாய்சா மலையில் ஏறிக் கொண்டிருந்த போது, நண்பகல் பொழுதில் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் அந்தக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் புதைந்து விட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளும், இராணுவ ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மீட்புப் படையினர் பணியில் புதைந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது சகஜம் தான் என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top