புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விபரீதமான உலக சாதனை ஒன்றை புரிகின்றமைக்காக பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை இளைஞன் ( வயது 24 ) ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.மண்ணுக்குள் ஆழமாக புதைக்கப்பட்ட பின்னும் உயிருடன் இருப்பார் என்கிற சாதனைக்காகவே இவர் பயிற்சியில் ஈடுபட்டு
இருக்கின்றார்.இவர் 10 அடி ஆழம் உடைய குழி ஒன்றுக்குள் குதித்து இருக்கின்றார்.

இதற்குள் வைத்து புதைக்க சொல்லி தாய், மைத்துனன், நண்பன் ஆகியோருக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.இவர் சொன்னபடி மரப் பலகை, மணல் ஆகியவற்றை கொண்டு குழியை நிரப்பி துவாரம் ஒன்று இருக்கத் தக்கதாக நெருப்பு மூட்டி இருக்கின்றனர்.நேற்று காலை 9.30 மணி அளவில் பன்சல்கொட என்கிற இடத்தில் இது இடம்பெற்றது.

மாலை 4.00 மண அளவில் குழியை திறந்து விட சொல்லி கேட்டு இருக்கின்றார்.உதவியாளர்கள் திறந்தபோது இவர் மயங்கிய நிலையில் இருந்திருக்கின்றார்.கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் உயிர் இழந்து விட்டார்.இவர் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் ஆவார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top