காரைநகர் முந்திப்புலம் பகுதியில் ஆள்களற்ற காணியில் இருந்து பிறந்து 20 நாள் மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் குழந்தை கதறும் சத்தம் கேட்டு அங்கு
சென்ற சிறுவன் ஒருவன், பெண் குழந்தை ஒன்று அநாதரவாகக் கிடப்பதைக் கண்டு காரைநகர் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்துள்ளான்.
சென்ற சிறுவன் ஒருவன், பெண் குழந்தை ஒன்று அநாதரவாகக் கிடப்பதைக் கண்டு காரைநகர் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்துள்ளான்.
சம்பவ இடத்துக்கு வந்த வைத்தியசாலை ஊழியர்கள் குழந்தையை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை பிறந்து 20 நாள்கள் தான் இருக்கும் என காரைநகர் வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக