இலங்கையில் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை முறை விரைவில் மீண்டும் வர உள்ளது. தற்போது இம்முறை இடைநிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சில மாற்றங்களுடன் இம்முறை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்து உள்ளார்.
இதற்கான உத்தேச யோசனை நகல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவையின் அனுமதி பெறப்படுகின்றமையை தொடர்ந்து மேற்கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வெளிநாடுகளில் குடியேறி உள்ள தகுதியான இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை மிகுந்த பயன் உடையதாக இருக்கும் என்பது நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக