விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்தே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் தரப்படுகிறது. அது டிபால்ட் உலாவியாகப்(Default Browser) பதியப்படுகிறது. ஆனால் அதைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.வேறு விதமான உலாவியையும் தரவிறக்கம் செய்து அதனையே மாறாத உலாவியாக
செட் செய்யலாம். இவ்வகையில் பயர்பொக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
செட் செய்யலாம். இவ்வகையில் பயர்பொக்ஸ், ஆப்பரா, நெட்ஸ்கேப் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
இவை தவிர இன்னும் பல உலாவிகளும் உள்ளன. இவற்றை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் டிபால்ட் உலாவியாக செட் செய்வதற்கு பயர்பொக்ஸ் உலாவியில் Tools/Options சென்று General என்பதன் கீழ் Default Browser என்று உள்ள இடத்திற்கு எதிராக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
நெட்ஸ்கேப் எனில் என்.எஸ். நேவிகேட்டரில் Edit / Preferences தேர்ந்தெடுத்து மேலாக வலது மூலையில் உள்ள “Set Default Browser” என்பதில் கிளிக் செய்திடவும்.
ஆப்பராவில் Tools / Preferences சென்று “Advanced” டேப் செலக்ட் செய்திடவும். இதில் “Programs” என்பதன் கீழ் “Check if Opera is default browser on startup” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
வேறு உலாவியை டிபால்ட் உலாவியாக செட் செய்து பயன்படுத்திய பின்னர் வேறு சில காரணங்களுக்காக இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மீண்டும் டிபால்ட் உலாவியாக அமைத்திட விரும்பினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து, அதில் Tools / Internet Options / Programs என்று செல்லவும்.
பின் “Reset Web Settings” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் “Internet Explorer should check” என்பதில் கிளிக் செய்திடவும்.
0 கருத்து:
கருத்துரையிடுக