புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாதம்பை – இரட்டைக்குளம் பகுதியில் கணவன் தனது இளம் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.நேற்று (25) மாலை வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கணவன் தனது இளம் மனைவியை சரமாரியாக
அடித்து உதைத்துள்ளார்.இதன்போது 21 வயதுடைய திஸ்னா சோபனி என்ற இளம் குடும்பப் பெண் வலி தாங்க முடியாது துடிதுடித்து ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அச்சம் கொண்ட கணவன் உடனடியாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.கணவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top