கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அடித்து கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் உத்திரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்திரமேரூர் நரசிம்ம நகர் தாமரை
குளத்தை சேர்ந்தவர் குமார் (37). பன்றி கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு துளசி (31), கன்னியம்மாள் (28) ஆகிய மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
குளத்தை சேர்ந்தவர் குமார் (37). பன்றி கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு துளசி (31), கன்னியம்மாள் (28) ஆகிய மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த 23ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சோழவரத்துக்கு வியாபாரம் தொடர்பாக குமார், கன்னியம்மாள், உறவினர் செந்தில்நாதன் (18) ஆகியோர் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இரவு தங்கினர். அப்போது குமார் மது குடிக்க வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்தபோது செந்தில் நாதனும் கன்னியம்மாளும் உல்லாசமாக இருப்பதை குமார் பார்த்துள்ளார்.
கன்னியம்மாளுக்கு உடல்நல குறைவு என்றால் செந்தில்நாதன் தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார். இருவரும் நெருங்கி பழகுவது குமாருக்கு அரசல் புரசலாக தெரியும். கண் எதிரே தப்பு நடப்பதை கண்டு குமார் ஆத்திரம் அடைந்தார். ஊருக்கு சென்றதும் உங்கள் கள்ளத் தொடர்பை அம்பலப் படுத்தி விடுகிறேன் என்று குமார் அவர்களிடம் கூறியுள்ளார்.
அதன்பின், போதையில் தூங்கியதும் குமாரை, செந்தில் நாதன் பன்றி வெட்டும் கத்தியின் பின்பக்க கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்தில் குமார் இறந்தார். இதற்கு கன்னியம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர் மொபட்டில் குமார் சடலத்தை வைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர். உத்திரமேரூர் மானமதி கூட்டு ரோடு பகுதியில் மொபட்டை சாலையில் போட்டுவிட்டு குமார் சடலத்தை அருகில் கிடத்தி விட்டு விபத்தில் இறந்தது போன்று செட்டப் செய்து விட்டு பஸ்சை பிடித்து செந்தில்நாதன், கன்னியம்மாள் வீட்டுக்கு வந்தனர். ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் மானாமதி சாலையில் சடலம் கிடப்பதாக பெருநகர் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் இறந்தவர் குமார் என்பதும், அவர் விபத்தில் இறக்கவில்லை. அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்தது.
சந்தேகத்தின் பேரில் கன்னியம்மாள், செந்தில்நாதனை பிடித்து விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. கள்ளக்காதலை அம்பலப்படுத்தி விடுவதாக குமார் கூறியதால் கொலை செய்ததை செந்தில்நாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக