உலகின் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனமான பிஎம்.டபிள்யு உலகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான கார்களை திரும்ப பெறுகிறது. ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு விலை உயர்ந்த கார்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம், தனது தயாரிப்பான 2003 - 2010 வரையிலான 5 சீரீஸ் மற்றும் 6 சீரீஸ் ரக கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் கார்களில் உள்ள பாட்டரி கேபிள் தவறான முறையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தவறால் சில சமயம் கார் ஸ்டார்ட் செய்ய இயலாது என்றும், மேலும் இது எளிதில் தீ பிடிக்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த குறைபாடும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனவும், இருந்த போதிலும் இந்த மாடல் கார்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இதுகுறித்த தகவல் அனுப்பப்படும் என்றும், அவர்களது கார்களில் உள்ள இந்த குறைபாடு சரி செய்யப்பட்டு மீண்டும் திரும்ப கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக