புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாகிஸ்தானில் 15 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து ஆணி, ஊக்கு, காந்தம் உள்பட 500 கிராம் எடையுள்ள உலோகப் பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.பாகிஸ்தானை சேர்ந்தவர் பாத்திமா ஹிப்ஸா என்ற 15 வயது சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை லாகூரில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 16ம் திகதி காலை சேர்த்தனர்.

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பதை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் நடந்தது.

இது குறித்து மருத்துவர் ஹினா கான் கூறுகையில், அறுவை சிகிச்சை மூலம் பாத்திமாவின் வயிற்றில் இருந்து 3 ஆணிகள், கொத்து ஊக்குகள், காந்தத் துண்டுகள் மற்றும் சில உலோகப் பொருட்களை எடுத்தோம்.

சற்று மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள இவர் உலோகப் பொருட்களை விழுங்கியுள்ளார். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி தெரியவில்லை. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top