புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடல் படை அதிகாரி ஒருவரின் கர்ப்பிணி மனைவி மற்றொரு ஆணுடன் ஓட்டம் பிடித்த விபரீதம் கொழும்பு – மொனறாகலை பஸ் பயணத்தின்போது இடம்பெற்று உள்ளது.அதிகாரிக்கு வயது 31. இரு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மொனறாகலையை அண்டிய இடத்தில்
வசித்து வந்தனர். கர்ப்பம் தரித்தார் மனைவி.

எனவே விசேட மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்க கொழும்புக்கு மனைவியை அழைத்து வந்திருந்தார். வைத்தியரின் ஆலோசனையை பெற்ற பிற்பாடு கொழும்பு – மொனறாகலை பஸ் நிலையத்துக்கு சென்று இருக்கின்றனர்.

பஸ்ஸில் புறப்படுகின்றமைக்கு முன்பாக கடை ஒன்றில் குளிர் தண்ணீர் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றை வாங்கி இருக்கின்றார்கள். பயணம் ஆரம்பம் ஆனது. மனைவி போத்தல் தண்ணீரில் கொஞ்சத்தை குடித்து இருக்கின்றார்.

இதைத் தொடர்ந்து மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டமையை கணவன் அவதானித்து இருக்கின்றார். சக பயணிகளில் ஒருவரான ஆணுக்கு மனைவி சிக்னல்கள் கொடுத்துக் கொண்டிருந்தமையும் கவனித்துக் கொண்டார்.

ஆனால் பெரிதாக எடுத்துக் கொண்டார் இல்லை. தேநீர் கடை ஒன்றின் முன்பாக இடையில் பஸ் நிறுத்தப்பட்டது. மனைவி மலசலகூடத்துக்கு என்று சென்று இருக்கின்றார். கணவனும், மனைவியுமாக பஸ்ஸில் இருந்து இறங்கி இருக்கின்றனர்.

கடமைகளை முடித்து விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார் கணவன். இவர் போத்தல் தண்ணீரில் மிகுதியை குடித்தார். அவ்வளவுதான் ஆழ்ந்த தூக்கத்துக்கு போய் விட்டார். எழுந்து பார்த்தபோது மனைவியை பஸ்ஸில் காணவில்லை. மனைவியிடம் சிக்னல் பெற்றிருந்த மற்றப் பயணியையும் காணவில்லை.

அதிகாரி மாத்தறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறையிட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top