புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்தக்கோட்டா பகுதியில் உள்ள பிடிஎம் சாலை அருகே ஆற்றுக் கால்வாய் உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் ஒரு சாக்குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், வி.கொத்தக்கோட்டா போலீசாருக்கு தகவல்
தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து சாக்குமூட்டையை பிரித்துப் பார்த்தனர். அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டும், முகம் சிதைந்த நிலையிலும் சடலமாக கிடந்தார்.

தகவலறிந்த மதனப்பள்ளி டிஎஸ்பி ராகவரெட்டி, இன்ஸ்பெக்டர் வம்சிதர்கவுட் ஆகியோர் மோப்பநாய் மற்றும் தடயவியல் குழுவினருடன் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

சடலமாக கிடந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரித்தபோது, கடந்த 4ம் தேதி அதிகாலை ஒரு தனியார் பஸ் இங்கு வந்துள்ளது. அதன் மேற்கூரை மீது சிலர் ஏறி, இந்த மூட்டையை வீசிச்சென்றுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுவதால், அந்த மூட்டை குறித்து கண்டுகொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை யாளிகளை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top