புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இரு மனைவிகளும் சந்தித்துக் கொண்டதால் வசமாக மாட்டினார் ஏமாத்தி திருமணம் செய்த கணவன். 41 வயதான Alan O Neill என்பவர் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.2009 ஆம் ஆண்டு தனது பெயரை மாத்திக் கொண்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இதுவரைக்கும் முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை.

ஆனால் எதிர்பாராத விதமாக சமூக வலைத் தளமான பேஸ்புக்கில் Alan O Neill இன் முதல் மனைவியும் இரண்டாவது காதல் மனைவியும் நண்பர்களாகின்றனர். அங்கே தான் பூகம்பம் ஆரம்பமாகின்றது.இரண்டாவது காதல் மனைவியின் பேஸ்புக் முகப்புப் படத்தில் Alan O Neill thirumanak கேக்குடன் நிற்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதனை பார்த்த முதல் மனைவி நடவடிக்கை எடுத்ததன் பேரில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த குற்றச்சாட்டில் Alan O Neill தற்போது ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சுவாரஷ்ய சம்பவம் அமெரிக்காவின் வாசிங்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top