புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு வங்கத்தில் பசி, பட்டினியைப் போக்க கிராமத்தினர் தங்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியால்
வாடுகின்றனர்.சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். பலர் தங்கள் சிறுநீரகத்தை விற்று பசியாறுகின்றனர். இதனால் சில கிராமங்களுக்கு கிட்னி கிராமம் என்ற பெயர் கிடைத்துள்ளது.

கிட்னி கிராமங்களில் வசிப்பவர்களில் பலர் ஒரு சிறுநீரகத்தை விற்றுவிட்டு ஒரு சிறுநீரகத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமம் கிட்னி விற்பனைக்கு பெயர் போனது ஆகும். இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்கள்.

அவர்கள் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே மழை பெய்யாததால் பூமி வறண்டு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்கின்றனர். அதிலும் போட்டி ஏற்பட்டதால் சிறுநீரகத்தை விற்று பசியாறுகின்றனர்.

சிறுநீரகத்தை விற்க தரகர்கள் உள்ளனர். அவர்கள் சிறுநீரகத் தேவையுள்ளவர்களிடம் ரூ.3 முதல் 4 லட்சம் பெற்றுவிட்டு சிறுநீரகத்தை விற்கும் அப்பாவி மக்களுக்கு வெறும் ரூ.80,000 வரையே கொடுக்கின்றனர். கிராம மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தரகர்கள் லாபம் அடைகின்றனர்.

முதலில் ஆண்கள் தான் சிறுநீரகத்தை விற்றனர். சிறுநீரகத்தை விற்று கிடைக்கும் பணம் குறையத் துவங்கியதும் பெண்களையும் சிறுநீரகத்தை விற்குமாறு அவர்கள் வற்புறுத்துகின்றனர். அதனால் தற்போது பெண்களும் அதிக அளவில் சிறுநீரகத்தை விற்கின்றனர்.

சிறுநீரகத்தை கொடுப்பதால் ஏற்படும் உடல் சோர்வையும், வறுமையையும் குடும்பத்தோடு சாராயம் குடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அந்த அப்பாவி கிராமத்தினர்.

சிறுநீரகத்தை கொடுப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே இறந்துவிடுவதாக சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையை மாற்றி அப்பாவி கிராம மக்களை காக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top