புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தென்காசி அருகே திருமணமான 40 நாளில் புதுமண தம்பதியினர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி அருகே உள்ள கரிசல் குடியிருப்பு பகுதி பஜனை மடத்தெருவைச் சேர்ந்தவர் காளி. அவருடைய மகன் தளவா (28).
மும்பையில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை செய்தார். அவருக்கும் தென்காசி அருகே உள்ள தட்டான்குளத்தைச் சேர்ந்த முத்தையா மகள் மாரியம்மாளுக்கும்(20) கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கோலாகலமாகத் திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து அவர்கள் விருந்தினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்று வந்தனர். மேலும் மறுவீட்டுக்கும் சென்றனர். திருமணம் முடிந்ததில் இருந்து 40 நாட்களாக அவர்கள் உள்ளூரில் தான் இருந்தனர். அடுத்த வாரம் தம்பதியர் மும்பைக்கு செல்லவிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவுக்குப் பிறகு அறைக்குள் சென்று கதவை உட்புறமாக அவர்கள் பூட்டிக் கொண்டனர். மாலையாகியும் கதவு திறக்கப்படவில்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று உறவினர்கள் நினைத்தார்கள். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவைத் தட்டினர். ஆனால் பதில் இல்லை. இதையடுத்து உறவினர்கள் இது குறித்து அச்சன்புதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதி தூக்கில் பிணமாகத் தொங்கினர். திருமணமான 40 நாளில் புதுமண தம்பதி தூக்கில் பிணமாகத் தொங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உதவி கலெக்டர், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top