புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருச்சி அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவி, மகளின் கழுத்தை அறுத்து, தனக்குத் தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அருகே, திருவெறும்பூர் மலைக்கோவில், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்து,35. இவரின் மனைவி முருகேஸ்வரி,32. இவர்களுக்கு, பீரவீணா,13, சதீஷ்,5, குணசீலன்,2, என, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முத்துவுடன், அவரின் தம்பி பாலமுருகன், தம்பி மனைவி கலா ஆகியோர், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். முத்து வீட்டில் ஓய்வெடுக்கும்போது, முருகேஸ்வரி இஸ்திரி கடைக்கு செல்வது வழக்கம்.கடந்த சில நாட்களாக, முருகேஸ்வரியின் நடத்தையில், முத்துவுக்கு சந்தேகம் எழுந்தது. முருகேஸ்வரி குறித்து, பலரிடம் விசாரிக்க துவங்கினார். இதனால், கணவன், மனைவிக்கிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று காலை, முருகேஸ்வரி நடத்தை குறித்து, தம்பி மனைவி கலா, முத்துவிடம் கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்ட முருகேஸ்வரி, கலாவை செருப்பால் அடிக்க முயன்றார். 
குடிபோதையில் இருந்த முத்து, ஆத்திரமடைந்து, முருகேஸ்வரியை சரமாரியாக அடித்து, உதைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முருகேஸ்வரியின் கழுத்தை அறுத்தார். தாயின் அலறலை கேட்டு, அவரை காப்பாற்ற முயன்ற பீரவீணாவின் கழுத்தையும் அறுத்தார். இவர்களின் கூக்குரலை கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளோர், முத்துவை துரத்திப் பிடிக்க முயன்றனர்.

"போலீசில் ஒப்படைத்து விடுவார்கள்' என்ற பயத்தில், முத்து தனக்குத் தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த மூவரையும், அப்பகுதியை சேர்ந்தவர்கள், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்:

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top