சீனாவில் விபசாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் மோட்டார் மற்றும் சைக்கிள் வாகன கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, 100 பேர் கொண்ட இந்திய குழு சீனா வந்துள்ளது. இதில் நான்கு பேர் ஓட்டல் அறை ஒன்றில் விபசார அழகிகளுடன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்னும் சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, இரண்டு இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதற்காக ஷாங்காய் வந்துள்ளனர். இவர்களுக்கு பொருட்களை சப்ளை செய்வதாக கூறிய ஏமன் நாட்டு நபர், பணத்தை வாங்கிக் கொண்டு தப்பியுள்ளார். இதனால், இரண்டு இந்தியர்களும் ஷாங்காயில் தவித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக