இளந்தலைமுறையினர் இணையத்தளப் பாலியல் படங்களைப் பார்த்து பிழையான வழியில் செல்லும் நிலை அதிகரித்துவருகின்றது.இதன்விளைவாக 12வயதுச் சிறுவன் ஒருவன் இளம் மாணவியைப் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சம்பவமொன்று
பிரித்தானியா எடின்பேர்க்கில் இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் பல நாட்டில் இடம்பெற்று வரலாமென்றும் சட்டவாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எடின்பேர்க்கின் நீதிமன்றம் தற்போது 14 வயதாகிவிட்ட பையனை அவன் இரு வருடங்களிற்கு முன்பு செய்த பாலியல் குற்ற வழக்கை விசாரித்தது.
பையனின் சட்டவாளர் குறிப்பிடுகையில் இணையத்தளத்தில் உலாவரும் பாலியல் வீடியோக்களால் இளந்தலைமுறையினர் குழப்பப்படுகின்றனரென்றும் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றும் தெரிவித்தார்.
நீதிபதி சிறுவனைத் தடுத்துவைக்கப் பணிக்கவில்லையெனினும் அவனை பாலியல்ரீதியாக செயற்படுவதெப்படி என்ற வழிகாட்டியாக நீலப்படங்களைப் நினைக்கக்கூடாதெனத் தீர்ப்பளித்தார்.
‘opt-in’ முறையினை இணையத்தளப் பயனாளர்களுக்கு ஏற்படுத்துவதற்கு அரசு கட்டாயப்படுத்தவேண்டுமென்ற அரசியல் தர்க்கம் எழுந்துள்ள அதேவேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறைமூலம் பெற்றோர்கள் வீட்டுக் கணினிகளில் நீலப்படங்களைப் பார்ப்பதைத் தடைசெய்யமுடியும். இதன்மூலம் பிள்ளைகள் பெரியவர்களது விடயங்களைப் பார்ப்பதைத் தடைசெய்யமுடியும்.
ஏன் இவ்வாறு செய்தாயென அவனிடம் கேட்டபோது தான் பெரியவனாக உணர்வதற்காகவும் ஒரு தூண்டுதலின் காரணமாகவுமே செய்ததாகக் காவற்றுறையினருக்குப் பதிலளித்தான்.
இவ்வாறு எத்தனை பிள்ளைகள் அடையாளங் கண்டுகொள்ளப்படாமலும் வெளியில் தெரியாமலும் இருக்கலாமெனச் சட்டவாளர் தெரிவித்தார்.
இச்சிறுவன் டிசம்பர் 1, 2010 இற்கிடையில் இந்த முயற்சியைச் செய்திருந்தாரென்று ஏற்றுக்கொண்டிருந்தார்.
எனினும் இவனுக்குத் தண்டனையளிக்கையில் அவனைச் சிறுவர் சட்டத்தின்படி தடுப்பில் வைக்காமல் கண்காணிப்பில் வைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவனுக்கு உறவு மற்றும் பாலியல் அபிவிருத்தி பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுமென்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு சிறுமியையோ பெண்ணையோ பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்யக்கூடாதென்றும் கூறி விடுவிடுத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக