இலங்கையர் 13 பேர் மாலைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஹசன் ஹனீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் உட்பட பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் மாலேயில் நேற்று முன்தினம் நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக