புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேலூரில் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த அக்காள், காதலுடன் ஓடியதால் அவரது 13 வயது தங்கையுடன் திருமணம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் இரு குடும்பத்தாருக்கும் எச்சரிக்கை விடுத்ததால்
திருமணம் நிறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியுர்குண்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுகவனம்(24). இவருக்கும் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிற்கு இடையே நேற்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இருவீட்டாரும் திருமண பத்திரிக்கை அடித்து வினியோகித்து, திருமண ஏற்பாடுகளில் விறுவிறுப்பாக இருந்தனர். இந்த நிலையில் மணப்பெண் கடந்த 30ம் தேதி அவரது காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தீர்மானித்தப்படி திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து இருவீட்டாரும் ஆலோசித்து, ஓடிபோன அக்காளுக்கு பதிலாக 13 வயதான அவரது தங்கையை மணப்பெண்ணாக்க தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து வந்தது.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கும், சமூக நலத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. மணமக்களின் வீட்டிற்கு சென்ற போலீசாரும், சமூக நலத்துறையினரும் சட்டவிரோதமான திருமணம் செய்தால், இரு வீட்டாரையும் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சட்ட விரோதமான திருமணத்தை உடனடியாக நிறுத்துவதாக இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தனர். இதனால் நேற்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top