புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குழந்தைகளை வைத்து ஆபாச படங்களை தயாரித்த 190 பேரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த குழந்தைகளையும் மீட்டனர்.கைதான 190 பேரில் சிலர் ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


இவர்கள் முதலில் குழந்தைகளோடு பேச ஆரம்பித்து, பின்பு ஆபாசப் படங்களைக் காட்டி அதுபோல அவர்களையும் இருக்குமாறு ஆசை காட்டியும் பின்பு மிரட்டியும் படமெடுக்கின்றனர்.

இதுகுறித்து புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் இயக்குனர் ஜான் மார்ட்டன் கூறுகையில், தற்போது நடந்த இந்த வேட்டையின் மூலம் இனிமேல் இது போன்ற கேவலமான செயல்களில் எவரும் ஈடுபடமாட்டர் என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது இளைஞன் ஒருவனிடம் இருந்து, சுமார் 1200 படங்களும், 109 குறுந்தகடுகளும் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் லேனி பிரூயர் கூறுகையில், ஐந்து வயதுக்கும் குறைந்த பச்சிளம் பாலகரை வைத்து ஆபாசப் படம் பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்ட, தனிச் சந்தையில் விற்ற பல குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top