அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசிக்கும் சூசன் ஏமேன்(வயது 33) என்ற பெண் தற்போது 400 கிலோ எடையுடன்(520 பவுண்ட்) வாழ்ந்து வருகிறார்.இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவரது காதலரான பார்கெர்
என்பவர் சூசனை திருமணம் செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் சூசன் ஏமேனின் தணியாத ஆசை என்னவென்றால், இந்த திருமண நிகழ்ச்சிக்குள் தான் உலகிலேயே அதிக எடையுள்ள(1,600 பவுண்ட்) பெண் ஆக வேண்டும் என்பதே ஆகும்.
இதற்காக அவர் தினமும் 12 பெரிய முட்டை ஆம்லேட், ரொட்டிகள் உள்பட 6 பிளேட் உணவுகளை வயிற்றுக்குள் தள்ளுகிறார். இது சுமார் 30 ஆயிரம் கலோரி கொண்டதாகும்.
அவருடைய காதலனே இந்த உணவை தயாரித்து கொடுக்கிறார். இவருக்கு ஆடை தயாரிக்க 45 அடி நீள துணி தேவைப்படுகிறது.
மேலும் சூசன் கூறும்போது, காதலர் சம்மதம் கிடைத்து விட்டதால் இனிய திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக