உலகில் புராதன காலக் கதைகளில்தான் கனிபல்களென்று அழைக்கப்படும் நரமாமிச உண்ணிகள்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தற்போது நாம் வாழும் காலகட்டத்திலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதுதான்
எதிர்காலத்திற்கு அச்சமூட்டும் விடயமாகும்.
ஓர் அமெரிக்க மாணவன் (21), தான் தனது அறை நண்பனைக் கொன்று அவனது உடல்களை வெட்டி மூளையையும் முழு இதயத்தையும் சாப்பிட்டதாகக் காவற்றுறையினருக்குத் தெரிவித்துள்ளான்.
கொல்லப்பட்டவரின் சகோதரனால் அவனது அறையில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது சகோதரனின் தலை மற்றும் கைகள் அறையில் கிடைத்ததால் இவன் கைதுசெய்யப்பட்டான்.
மோர்கன் மாநிலப் பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவனாவான்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லையெனினும் இச்சம்பவம் வட அமெரிக்காவில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில்தான் ஒரு கனேடிய பாலியல் தொழிலாளியைப் பாகம் பாகமாக வெட்டிக் கொன்று அதை வீடியோப் பதிவும் செய்த ஒரு நபர் சர்வதேசக் காவற்றுறையினரால் தேடப்பட்டு வருவதும் மியாமியில் ஒரு மனிதனின் முகத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிர்வாண நபர் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது தற்போது வெளியிடப்படும் பயங்கரமான படங்களில் காணப்படும் நிகழ்வுகளே இளையோர்களின் மனத்தில் பதிந்து அவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக்கித் தங்களை அதில் வரும் பாத்திரங்கள் போலக் கற்பனைசெய்யவைக்கின்றதுபோலும்.
0 கருத்து:
கருத்துரையிடுக