புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்ற நபர் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்ததுடன் அண்மையில் மட்டக்களப்பிலும் ஒரு திருமணத்தை செய்துள்ளார்.


இதனால் மனமுடைந்த முதல் மனைவி உறவினர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். முதல் மனைவியிடம் வாங்கிய சீதனத்தைக் கொண்டே அலெக்ஸ்குமார் வியாபாரம் செய்து முன்னேறியுள்ளார்.

அண்மைக்காலமாக அலெக்ஸ்குமார் நெல்லியடியில் உள்ள மூன்றாவது மனைவியின் வீட்டில் தினமும் இரவில் தங்கிவந்துள்ளார்.

அவ்வாறு நெல்லியடி கரவெட்டி கிழக்கில் உள்ள மூன்றாவது மனைவியின் வீட்டில் நேற்று இரவு தனது காரில் சென்று தங்கியிருந்த போது முதல் மனைவியின் உறவினர்கள் அவரது காரை அடித்து நொருக்கியதுடன் வீட்டின் யன்னலினையும் அடித்து நொருக்கிய போதும் அலெக்ஸ்குமாரினை தாக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியின் அன்பு கட்டளைக்கிணங்கவே அவரை தாக்காமல் வாகனங்களை மட்டும் தாக்கியதாக தெரியவருகின்றது

தமிழ் பெண்கள் சீதனம் கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் நிலவி வருவதால் பல பெண்கள் திருமணம் செய்யாமல் இருப்பதையும் பெண்களின் வறுமையையும் பயன்படுத்தி இவ்வாறான நபர்கள் கலாச்சார சீர்குலைவை ஏற்படுத்தி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள அதே வேளை கலாசார சீர்குலைவும் அரங்கேரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மட்டும் எட்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா கடந்த சனிக்கிழமை யாழ் பொலிஸ் நிலையத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top