யாழ். சுன்னாகம், காவடி கிழக்குப் பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று, அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறக்கும்போதே இறந்த நிலையில் இருந்ததால், குறித்த பெண் அதனை குழி தோண்டிப் புதைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண், யாழ். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றபோது வைத்தியர்கள் பெண் குழந்தை பெற்றெடுத்ததைக் கண்டுபிடித்துள்ளதுடன், இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக