புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போதை என்றாலே நம் மக்களின் சிந்தனைக்கும் கண்களுக்கும் முதலில் தெரிவது குடிப்பழக்கம்தான். அப்படி அறிவுறை சொல்லுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என்னை பொறுத்த வரை
குடிப்பது தவறு இல்லை அதே நேரத்தில் குடிப்பதற்கு அடிமையாகுவதைத்தான் தவறு என்று நினைக்கிறேன். போதைக்கு அடிமையாகுவதால் உடல் நலமும் மன நலமும் குடும்ப நலமும் கெடுகிறது அதனால் அடிமையாகுவது தவறுதான். 

அதுமட்டுமல்லாமல் எது நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறதோ அது எல்லாம் தவறுதான் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.அப்படி பார்க்கும் போது குடிபழக்கம் மட்டுமல்ல பல்வேறு செயல்களும் நம்மை அடிமையாக்கி நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறது. 


அனேகம். இந்த பேஸ்புக் போதைக்கு தற்போது அடிமையாகி வருகின்றனர் எமது இளைஞர்களும் வயோதிபர்களும் இதற்க்கு தற்போது . அடிமையாகியவன் அவனது வாழ்வையும் அவனது குடும்ப வாழ்வையும் மட்டும்தான் கெடுக்கிறான், ஆனால் இந்த சமுக வலைதளங்களில் அடிமையாகிய பலர் அவர்களது வாழ்வையும் அவர்களது குடும்ப வாழ்க்கையும் கெடுப்பது மட்டுமல்லாமல்  சில     நாசகார வேலைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது 


இன்று பேஸ்புக் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும்,அடிமையாக மாறிவருவதாக பலர் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
இன்று அலுவலகப் பணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. பொது மக்கள் போய் ஏதாவது கேட்டாலும் எரிந்து விழுகிறார்கள்.கிட்டத்தட்ட பேஸ்புக் எல்லோரையும் கட்டிப்போட்டு ஒரு வித போதைத்தனமான அடிமைக்கு நம்மை இட்டு செல்கிறது . நான் அறிந்து பார்த்ததிலும்   பேஸ்புக்  இவர்களுக்கு சோறு, தண்ணிகூட வேண்டாம் ,சிலருக்கு பேஸ்புக் இருந்தால் போதும்  இணைய இணைப்பு கிடைக்காத போது பலர் எரிந்து விழுகிறார்கள்.வரும்போதே உடலும்,மனமும் பரபரக்கத்தான் வருவார்கள். இது போன்ற ஒரு பழக்கத்தை விட முடியாமல்’ உடலும் மனமும் பாதிக்கப்படும் நிலைமைக்கு பலர் அடிமையாகி வருகின்றனர் .


பேஸ்புக்தான் என்றில்லை,வலைப்பதிவுக்கு கூட ஒருவர் அடிமையாக முடியும்.நாம் கற்றுக்கொண்ட பழக்கம் நம்மை ஆளும் நிலைதான் அடிமைத்தனம். போதை மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமையானவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு குடிக்காவிட்டால் அவர்களின் மனம் அமைதி இழக்கும்.அதன் விளைவாக உடலில் மாற்றங்கள் உருவாகும். எரிந்து விழுவார்கள். எதையும் அதற்க்காக இழக்க தயார் ஆவார்கள் எப்படியாவது எப்படியாவது என்று மனம் தேடுத்தொடங்கி விடும். அது போலத்தான் பேஸ்புக் ,வலைதளங்கள் போன்றவையும் இப்படி அடிமையாக்க முடியும்.


எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம்தான் அதனை ஆள வேண்டும். அப்படி முடியாத நிலையில் தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம். எந்த சமூக வலைத்தளங்களையும் பேஸ்புக்   நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.அது போலதான் எம்மவர்களின்இணையவலப்பகுதி ஊடக நல்ல தேடலை நோக்கி செல்லும் போதும் இந்த அடிமைத்தனத்தில்  இருந்து விடுபடலாம்.
என்ன  என் மனதில் உள்ளதையும் என் தேடல்  பகுதி உடாகவும் இங்கே  பதிவு செய்துள்ளான் . எனக்கு தெரிந்த உண்மைகளை இங்கே சொல்லியுள்ளேன்.

உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் .நீங்களும் இதைப்பற்றி உங்கள் மனதில் இருப்பதை இங்கே கொட்டலாமே

அன்புடன்,
உங்கள் பலெர்மோ  தமிழ் கிறுக்கன் 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top