மத்திய மாகாண பாடசாலைகளிலிருந்து எதிர்வரும் 26 ஆம் திகதி இடம் பெறவுள்ள 5 தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னோடி பரீட்சையில் தமிழ் மொழி மூல மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதனை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் இந்த முன்னோடிப்பரீட்சை இன்று இடம் பெற்றது..
இந்தப்பரீட்சைக்கான வினாபத்திரங்களைக் கல்விப்பணிமனையினூடாக உரிய பாடசாலை அதிபர்கள் பெற்று தமது பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சையினை நடத்தி அதற்குரிய புள்ளிகளை கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாணக்கல்வித் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது..
எனினும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு இந்த முன்னோடிப் பரீட்சையினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாணக் கல்வித்திணைக்களம் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சும் இதுவரை எவ்வித அக்கறையுமின்றி செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவாராஜாவிடம் எமது செய்திச் சேவை வினவியது.
0 கருத்து:
கருத்துரையிடுக