புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கணவனின் கை-கால்களை கட்டிப்போட்டு எரித்துக்கொன்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது மகள் மற்றும் உறவினரிடம் விசாரித்து வருகின்றனர்.


சென்னை பூந்தமல்-: திருவேற்காடு அடுத்த கோலடி, அன்புநகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பிருந்தா (35). இவர்களுக்கு பானுப்பிரியா (15) என்ற மகள் உள்ளார்.


சக்திவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். அதுமட்டுமின்றி மனைவியின் மீது சந்தேகம் கொண்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இரவு அதிக போதையில் வீட்டிற்கு வந்த சக்திவேல், வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்தார். இதையடுத்து வீட்டில் இருந்த பிருந்தா, மகள் பானுப்பிரியா ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில் பிருந்தாவின் வீட்டிற்குள் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் பிருந்தா, ஓடி வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது தனது கணவர் தீயில் எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றினார். ஆனால் அதற்குள் சக்திவேல், உடல் முழுவதும் தீயில் எரிந்து கரிக்கட்டையாகி விட்டது. அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீயில் எரிந்து கிடந்த சக்திவேலின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது இறந்து கிடந்த சக்திவேலின் கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதி போலீசார், சக்திவேலின் சாவில் மர்மம் இருப்பதை உணர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவருடைய மனைவி பிருந்தாவை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதில், கை-கால்களை கட்டி கணவரை தானே தீ வைத்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கணவரை கொலை செய்தது எப்படி? என்று போலீசாரிடம் பிருந்தா கூறியதாவது:-

எனது கணவர், மிகவும் குடிப்பழக்கம் உடையவர். இதனால் நான் கோயம்பேட்டிற்கு சென்று கீரை வாங்கி வந்து விற்பனை செய்வேன். தினமும் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். என்மேல் சந்தேகம் கொண்டு தகாத வார்த்தைகள் கூறி அடித்து, உதைப்பார். இதனால் எங்களுக்கு அப்பகுதியில் வாழ்வதற்கு மிகுந்த கேவலமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சக்திவேல், என்னிடம் தகாத வார்த்தைகள் கூறி அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், என்னுடைய மகள் பானுப்பிரியா மற்றும் உறவினர் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து எனது கணவரின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு விட்டோம்.

பின்னர் இருவரும் சென்று விட்டனர். நான் மட்டும் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன், அப்போதும் எனது கணவர், தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், மண்எண்ணெயை எடுத்து சக்திவேலின் உடலில் ஊற்றி, தீ வைத்து கொளுத்தினேன். பின்னர் எதுவும் நடக்காதது போல் பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எனது கணவர் இறந்து கிடந்ததால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பிருந்தாவை போலீசார் கைது செய்தனர். இறந்து கிடந்த சக்திவேலின் கழுத்தில் துணி இறுகியபடி இருந்ததால் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, பின்னர் தீ வைத்து கொளுத்தினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மகள் பானுப்பிரியா மற்றும் உறவினர் செல்வராஜ் ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top