புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெற்ற குழந்தைக்கு நஞ்சு கொடுத்துக் கொன்ற தாயாரின் வாக்குமூலமே இது,கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்புகளை வைத்துள்ளார்.கணவரின் அம்மாவும், அப்பாவும், வீட்டில் ஏனையவரும் என்னுடன் கோபம். நான்
தோட்டத்தில் வேலைசெய்தே சீவித்து வந்தேன்.

இருந்தாலும், நிம்மதியாக இருக்க முடியாது. நானும் நஞ்சுகொடுத்து, பிள்ளைக்கும் நஞ்சுகொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தேன். இவ்வாறு கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் 32 வயதான பெண் கூறியுள்ளார்.

எட்டியான்தோட்டை பணாவத்த பகுதியில் இரண்டரை வயது குழந்தைக்கு நஞ்சைக் கொடுத்து தானும் நஞ்சு அருந்தி கடந்த 11ஆம் திகதி இரவு தற்கொலைக்கு முயற்சித்த தாய் உயிர் பிழைத்துக் கொண்டார்.

உறவினர்கள் தாயையும், பிள்ளையும் வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதிலும் குழந்தை உயிர் பிரிந்துவிட்டது.

சம்பவம் குறித்து பெண்ணை கைதுசெய்து காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின்போதே இந்தப் பெண் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top