பழைய நடிகை ஸ்ரீதேவி 26 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கிலும் ரிலீசாகிறது.
ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத் தலைவியின் அவஸ்தைகளே படத்தின் கதை. அக்டோபர் 5-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்படத்தின் தமிழ் பதிப்பில் அஜீத்தை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க விரும்பினர். அஜீத்தை அணுகி கேட்டபோது உடனடியாக சம்மதித்தார்.
மும்பையில் படப்பிடிப்புக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டன. இதில் நடிப்பதற்கு அஜீத்துக்கு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தார். மும்பை வந்து செல்வதற்கான விமான செலவுகள் ஓட்டலில் தங்கும் செலவு போன்றவற்றையும் ஏற்க முடிவு செய்து இருந்தனர்.
சமீபத்தில் மும்பை சென்று படப்பிடிப்பை அஜீத் முடித்து கொடுத்தார். ஆனால் ஸ்ரீதேவியுடன் நடிக்க அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. விமானம் மற்றும் ஓட்டல் செலவுகளையும் தானே கவனித்து கொண்டார். அஜீத் நடவடிக்கைகளை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர்.
ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் இதுபற்றி கூறும்போது, அஜீத் அற்புதமான மனிதர். பெரிய நடிகராக இருந்தும் எளிமையாக நடந்து கொண்டார் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக