புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜெர்மனி ஹம் நகரிலமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வயோதிபமாது ஒருவர் கடந்த புதன்கிழமையன்று அகாலமரணமானார். இலங்கையின் கரம்பன் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இராசம்மா சுப்பையா (வயது 82) என்பவரே மரணமானவராவார். இவர் அமரத்துவமடைந்த பிரபல எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதனினதும் , திரு.எஸ்.எஸ்.குகநாதன் அவர்களின்  தாயாருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாயக்கிழமை நண்பகலில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க அவர் முற்பட்டபோது அவர்மீது தீ பற்றிக்கொண்டதாக தெரியவருகின்றது. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்புப்படையினரும் பொலிசாரும் அவரை மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தனர். டோட்மூண்ட் நகரிலுள்ள வைத்தியசலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top