நரை முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.
ஆரஞ்சு பழசாறை ஃபீரிஸரில் வைத்து அதனை வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் வைத்தல் நல்லது.
தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதில் ஓமத்தைப் போட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும்.
துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினால் பித்த வெடிப்பு குறையும்.
குளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி வரலாம்.
முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வர முகம் மலர்ச்சியடையும்.
உங்கள் நிறத்திற்கு ஏற்ற நகப் பூச்சுகளை மட்டும் பூசுங்கள். அழகாக இருக்கும்.
மாதத்தில் ஒரு வாரமாவது நகங்களை பூச்சுக்கள் இல்லாமல் வையுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக