`அய்யா வழி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஜிபாலா. மேலும் அவர் `முத்துக்கு முத்தாக', `கோரிப்பாளையம்' உள்பட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் ஆகும். சுஜிபாலா தற்போது "உண்மை'' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை ரவிக்குமார் என்பவர் இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் சுஜிபாலாவை தனது மனைவியாக்க ரவிக்குமார் விரும்பினார். இதைத் தொடர்ந்து ரவிக்குமார், சுஜிபாலாவை திருமணம் செய்ய முடிவு செய்து, நாகர்கோவிலில் உள்ள அவரது பெற்றோரைச் சந்தித்து பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி கொய்யன் விளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரவிகுமார்-சுஜிபாலா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடிகை சுஜிபாலா திடீரென நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை சுஜிபாலா தற்போது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வற்புறுத்தலின் பேரிலேயே அவர் நிச்சயதார்த்தத்துக்கு சம்மதித்து உள்ளார்.
இது தொடர்பான பிரச்சினையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால் சுஜிபாலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை டாக்டர்கள் இதுதொடர்பான தகவல்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதே சமயம் சுஜிபாலாவின் பெற்றோர் மற்றும் உறவினர் களிடம் விசாரித்தபோது, அவர்கள் சுஜிபாலாவுக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சலின் காரண மாக ஆஸ்பத்திரியில் அனுமதித்திருப்பதாகவும், இதுதொடர்பான தகவல்கள் எதையும் வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக