இப்போதெல்லாம் பொலிசார் திருடர்களைப் பிடிப்பதிலும் பார்க்க, கண்ணில் விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு காதல்ஜோடிகளைப் பிடிக்கவேண்டி உள்ளது. காரணம் மாணவ மாணவியர்கள், பள்ளிக்குச் செல்லாமல் ஆங்காங்கே காதல் புரிவது படு
சகஜமாகிவிட்டது. பள்ளிக்கு மாணவி வரவில்லை என்று தலைமை ஆசிரியர் வீட்டிற்கு கால் அடித்தால், பதறியடிக்கும் தாய் தந்தையர் இல்லை இல்லை எனது பிள்ளை பள்ளிக்கூடம் தான் வந்தார். எவ்வாறு காணமல்போனார் என்று பயந்து பொலிசாரிடம் முறையிடுவது சகஜமாகிவிட்டது. இவ்வாறு தம்புள்ளை ரஜமகா விகாரைக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் ஒன்றாக இருந்த எட்டு காதல் ஜோடிகளை காவல்துறையினர் நேற்று கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இந்த ஜோடிகளில் பெண்கள் அனைவரும் பாடசாலை மாணவிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இவர்கள் இவ்வாறு காதலர்களைச் சந்திக்க வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மாணவிகள் 15 முதல் 17 வயது வரையிலானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு மாணவியைப் பொறுப்பேற்க அவர்களது பெற்றோர் வரவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக