இலங்கையின் காலி மாவட்டத்தின் மினுவன்கொட பிங்கேய்கந்த பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் காதல் ஜோடி, அண்ணன் தங்கையென காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இந்தக் காதலர்களின் தாய் ஒருவர் என்ற போதிலும் தந்தை
இருவர் எனத் தெரியவந்துள்ளது.
கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனும், குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இளைஞன் சிறுவயது முதல் கண்டியிலுள்ள சிற்றன்னையின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இளைஞனின் தந்தை, தாயைவிட்டு பிரிந்த பின்னரே இவர் சிற்றன்னையின் வளர்ப்பில் இருந்துள்ளார்.
இதன் பின்னர் இளைஞனின் தாய் வேறொருவரை மணம் முடித்துள்ளார். பின்னர் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளன.
இதில் ஒரு பெண் பிள்ளையின் பூப்புனித விழாவிற்கு சென்றுள்ள குறித்த இளைஞன், அந்தப் பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி இருவரும் வீட்டை வீட்டு ஓடிச் சென்றுள்ளனர்.
பின்னர் இவர்கள் இதுகுறித்து வீடுகளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞனின் தந்தை காரசாரமாக திட்டியுள்ளார்.
இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை என்ற விபரம் இந்தச் சந்தர்ப்பத்திலேயே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் சமுகத்திற்கு முகங்கொடுக்க முடியாது ரயில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட இளைஞனிடமிருந்து மற்றுமொரு யுவதியின் அடையாள அட்டையொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த யுவதியுடனும் இளைஞன் காதல் (கள்ளத்) தொடர்பைப் பேணிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த காதல் தொடர்பை அறிந்துகொண்ட குறித்த யுவதியின் காதலனான இராணுவச் சிப்பாய் மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதியையும், குடும்பத்தாரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கண்டி, கலுகம்மான பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக