அட்டன் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட பொழுது இவருக்கு உதவிய இரண்டு பாடசாலை
மாணவர்கள் தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. தற்போது இந்த இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் அட்டன் பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் 13 வயதுடையவர்கள் எனவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வீட்டுப் பாவனை பொருட்கள், பணம் மற்றும் கடைகளில் இலக்ரோனிக் பொருட்கள் திருடியது மட்டுமல்லாமல் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் திருடி அவற்றைப் பகுதிபகுதியாகப் பிரித்து விற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்கள் திருடிய தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பகுதியளவில் அகற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பவற்றையும் அட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களை அட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்தி தொடர்ந்து வைத்திருந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியைப்பெற்ற அட்டன் பொலிஸார் இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக