புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ். பண்டத்தரிப்பில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்நாள் இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த
மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சுந்தரமூர்த்தி புஸ்பராசா (வயது 40) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் நஞ்சருந்திய நிலையில் சங்கானை வைத்தியசாலையில்  உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணைகளை பண்டத்தரிப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top