புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்டர்நெட்டில் பலாத்கார காட்சிகளைப் பார்த்து வெறியேறிப் போய், பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 67 வயது மூதாட்டியை 2 முறை மிருகத்தனமாக பலாத்காரம் செய்து, அவரைக் கடுமையாக தாக்கி கொலை செய்த 26 வயது இளைஞருக்கு இங்கிலாந்து கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் 28
வருடங்களுக்கு அவருக்கு பரோலே கொடுக்கக் கூடாது என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கொடூர நபரின் பெயர் டேரன் ஜாக்சன். 26 வயதாகிறது. கொல்லப்பட்ட பாட்டியின் வயது ஐரீன் லாலெஸ், 67 வயதாகிறது. இங்கிலாந்தின் கார்மர்தென்ஷயர் அருகே உள்ள லல்லன்லிவ்னி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மிகவும் அமைதியானவர். கிராம மக்களின் அன்பைப் பெற்றவர். நல்ல ஓவியர். மெழுகுவர்த்தி, சோப்பு உள்ளிட்டவற்றை தானே தயாரித்து கிராமத்தில் உள்ள கடைகளில் விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அனைவரும் தங்களது சொந்த பாட்டியாக, சகோதரியாக, அன்னையாக் பார்த்து அன்பு செலுத்தி வந்தனர். அந்தப் பாட்டியைத்தான் இப்போது ஜாக்சன் மிருகத்தனமாக கொலை செய்து விட்டார்.

இந்தப் பாட்டி வசித்து வந்த வீட்டுக்கு அருகில்தான் ஜாக்சன் வசித்து வருகிறார். அவருடன் தாயும், வளர்ப்புத் தந்தையும் வசித்து வருகின்றனர். பாட்டி தனது வீட்டில் தனியாகவே வசித்து வந்தார்.

ஜாக்சன் ஒரு ஆபாசப் படப் பிரியர் ஆவார். இன்டர்நெட்டில் அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்ப்பது வழக்கம். அதிலும் பலாத்கார காட்சிகள் என்றால் ரொம்ப வெறித்தனமாக பார்ப்பாராம். மேலும் வயதான பெண்களை பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகளைத்தான் இவர் அதிகம் பார்த்துள்ளார். பாட்டியைக் கொலை செய்வதற்கு முன்பு கூட இன்டர்நெட்டில் வயதான பெண்கள், பலாத்காரம், தூங்கும் பெண்களை பலாத்காரம் செய்வது உள்ளிட்டவற்றை தேடிப் பார்த்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு லாலெஸின் வீட்டில் திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே புகுந்துள்ளார் ஜாக்சன். பின்னர் லாலெஸ் தூங்கிக் கொண்டிருந்த பெட்ரூமுக்குள் புகுந்தார். பின்னர் அவரை நெருங்கி, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யத் தொடங்கினார். முதல் முயற்சியிலேயே பாட்டி வலுவிழந்து போய் விட்டார். பின்னர் சில நிமிட இடைவெளியில் மறுபடியும் ஒருமுறை பலாத்காரம் செய்தார்.

இதில் பாட்டி கிட்டத்தட்ட சுய நினைவை இழந்து விட்டார். அதன் பின்னர் பாட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் பாட்டியின் நிர்வாண உடலை பெட்டுக்கும், ஜன்னலுக்கும் நடுவே போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

போகும்போது பாட்டியின் கைப்பை மற்றும் அவரது ஆடி காரின் சாவிகளை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார். கைப்பையில் இருந்ததை எடுத்துக் கொண்டு வெறும் பையை பக்கத்து வீட்டுக்காரரின் பூத்தொட்டியில் போட்டு விட்டார். பின்னர் ஆடி காரில் கென்ட் நகருக்குக் கிளம்பினார். வழியில் பெட்ரோல் போட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தின்போது பாட்டிக்கு 29 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலீஸாருக்குத் தகவல் போய் வலை வீசி தேடியதில் ஐந்து மணி நேரத்தில் சிக்கினார் ஜாக்சன்.

அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர் மீது கொலை மற்றும் 2 பலாத்கார வழக்குகளைத் தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதி கடும் கோபத்துடன் தீர்ப்பை வாசித்தார். மிருகத்தனமான, இதயமே இல்லாத செயலை செய்துள்ளீர்கள் நீங்கள் என்று ஜாக்சனை கண்டித்த நீதிபதி, கொலைக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு பாலியல் பலாத்காரத்திற்காக தலா 12 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 28 ஆண்டுகளுக்கு ஜாக்சனை பரோலில் விடவே கூடாது என்றும் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top