எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். இன்று சற்று வித்தியாசமான சிறுத்தை மனிதனைப்பார்க்க போகிறீர்கள். ஆம் தான் சிறுத்தையாக மாற ஆசை கொண்டு உடல் முழுவதும் சிறுத்தை போன்று பச்சை குத்தியுள்ளார் ஒரு மனிதர்.
இது மாத்திரம் இன்றி இவர் யாரும் இல்லாத காட்டுக்குள் தன்னந்தனியே ஒரு பாழடைந்த குடிசையில் 20 வருடங்களாக தனது வாழ்க்கையை கழித்துள்ளாiராம். மின்சாத வசதியோ வீட்டில் வேறு எந்த தளபாட வசதிகளோ இன்றி வாழ்க்கை நடத்தியுள்ளார்.
இவர் தனது உடலில் பச்சை குத்துவதற்காக மொத்தம் 9500 டாலர் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் முன்னாள் படை வீரரும் கூட. தற்போது இவருக்கு 75 வயதாவதாக குறிப்பிடப்பட்டள்ளது. எனினும் தற்போது இவர் எவ்வாறான வாழ்க்கை வாழ்கிறார் என்பது தெரியவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக