பிரிட்டிஷ் கொலம்பியாவில், தன் தாயைக் கொடூரமாகக் கொன்று சூட்கேஸில் அடைத்து வைத்த மகனை கைது செய்தனர். அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு அவனை விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்.புலனாய்வு துறையை சேர்ந்த
ஜென்னிஃபெர் பவுண்ட் கூறுகையில், 47 வயது மதிக்க தக்க லியான்ஜி குஓவைக் கொன்ற வழக்கில், அவருடைய மகன் 25 வயது மதிக்க தக்க யுவான் க்ஸி தாங் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
லியான்ஜி குஓ என்ற தாய் யூன் மாதம் ஏழாம் நாள் முதல் தான் வாழ்ந்து வந்த ரிச்மாண்ட் பகுதியில் காணவில்லை. யூலையில் மாதம் அவரது உடலை பவல் நதியின் அருகே உள்ள ஹார்வுட் ஐலண்டில், சூட்கேசில் கண்டுபிடித்துள்ளனர். அவரை அவரது மகன் கொன்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக