புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

போதையில் மாடியிலிருந்து விழுந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி அருகே பிடமனேரியை சேர்ந்தவர் மாணிக்கம் (45). சுமை தூக்கும் தொழிலாளி. மனைவி புனிதா (35).
தள்ளுவண்டியில் சர்பத் வியாபாரம் செய்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்துள்ளது. நேற்றிரவு தம்பதியினர் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

போதையில் இருந்த புனிதா, திடீரென முதல் மாடியிலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு மாணிக்கம் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் புனிதா இறந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் போலீசுக்கு போன் செய்த மாணிக்கம், தனது மனைவியை 10 பேர் கும்பல் தாக்கி மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக கூறினார். போலீசார் வந்து புனிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணிக்கம் கூறுவதுபோல புனிதாவை 10 பேர் கும்பல் தள்ளிவிட்டு கொன்றதா, அவர் போதையில் தவறி விழுந்தாரா அல்லது தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்து விழுந்தாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணிக்கத்திடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top